Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்லில் மொத்தம் எத்தனை 'ROW'? 9 மணி நேரம் ஆராய்ந்த இளைஞர்!

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், வால்பேப்பர் ஸ்க்ரீன்ஷாட் சேலஞ்ச் என இண்டர்நேஷ்னலிலும், பிரியாணி சேலஞ்ச் என லோக்கலிலும் வைரல் ஆன சேலஞ்ச் விடியோக்கள் ஏராளம். அதை போல யூடியூபில் புதிதாக ஒரு எக்செல் சேலஞ்ச் வைரல் ஆகி வருகிறது. அதாவது மைக்ரோசாஃப்ட் எக்செலின் வரிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்ய கீபோர்டில்  கீழ் குறி (Down arrow) பட்டன் மீது விரலை வைத்து கடைசி வரி வரும் வரை காத்திருப்பதே இந்த சேலஞ்ச்.

எக்ஸெல்

வீடியோகேம்ஸில் பிரபலமான மரியோ விளையாட்டில் அந்த இளவரசியை கடைசிவரை பார்க்கவே முடியாது. கன்னித்தீவு போல முடிவே இல்லாத பல விஷயங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் எக்ஸெல்லின் கடைசி வரி என்று கூட சோஷியல் மீடியாவில் சிலர் சொல்லியிருந்தார்கள். அதைத் தேடிதான் ஹண்டர் கிளம்பினார்

யூடியூபில் ஹன்டர் ஹாப்ஸ் என்பவரால் வெளியடப்பட்ட இந்த வீடியோவில் அவர் சொன்னது இதுதான்.

“இருப்பதிலேயே முட்டாள்தனமான சேலஞ்ச் இது தான். எக்செலில் எத்தனை வரிகள் என்பதை விரலை எடுக்காமல் கீழே வரை சென்று பார்க்கப்போகிறேன். Ctrl பட்டன் பயன்படுத்த மாட்டேன். கீழ்குறி பட்டன் மட்டும் பயன்படுத்தி கீழே செல்லப்போகிறேன். அதே போல் விரலுக்கு பதிலாக எதையும் வைத்து பட்டனை அமுக்க மாட்டேன். கடினம் என்று தெரியும், ஆனால் யாரும் செய்யாததால் நான் செய்கிறேன்”

எக்செலில் மொத்த வரிகள் 1048576. அதை சரிபார்க்க இருப்பதிலேயே கடினமான வழியை தேர்ந்தெடுத்தார் ஹாப்ஸ்.
கையில் உண்பதற்கு சில பண்டங்களும் தண்ணீரும் வைத்துக்கொண்டு தொடங்கிய ஹாப்ஸ் பாத்ரூமுக்கு எப்படி செல்லப்போகிறேன் என்று தெரியவில்லை என்கிறார். 

சேலஞ்சை தொடங்கிய அவர், முதலில் ஏதும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார். பின் போனில் ஏதோ செய்கிறார். பாட்டு கேட்கிறார். ஆனால் கடைசி வரி வந்த பாடு இல்லை.தலையில் கை வைத்து பாவமாக உட்கார்ந்துக் கொண்டு கடைசி வரியை எதிர் பார்த்தவாறு உள்ளார். தூக்கம் வரும் போதெல்லாம் ஒரு பதக்கத்தை கையில் எடுத்து ஆட்டிக்கொண்டிருக்கிறார். இடது கை வலது கை என மாற்றி மாற்றி வைத்துக்கொள்கிறார். போனில் பேசுகிறார், பீசா உண்கிறார், உணவுகளை மேலே தூக்கிபோட்டு பிடித்து விளையாடுகிறார். செல்ஃபீ எடுக்கிறார், ஹாக்கி மட்டையை சுழற்றுகிறார். டென்னிஸ் மட்டை கொண்டு விளையாடுகிறார். எழுந்து நின்று கைகளை சுழற்றுகிறார், புத்தகம் படிக்கிறார். கடைசி வரிக்கு சென்ற பின் அவர் கூறியது

“நான் ஒரு வழியாக கடைசி வரிக்கு சென்று விட்டேன். ஒன்பது மணி நேரம் முப்பத்து ஆறு நிமிடங்கள் ஆனது. கைகளில் பலத்த வலி. ஆனால் செய்து முடித்து விட்டேன். யாருக்கும் பரிந்துரை செய்ய மாட்டேன். தயவு செய்து இதை செய்து பார்க்காதீர்கள்”

இரண்டு நிமிடங்கள் முப்பத்து ஒன்பது நொடிகள் கொண்ட இந்த வீடியோவை இது வரை எட்டு லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். மூவாயிரம் மக்கள் லைக் செய்துள்ளனர். இவரது சேனலில் முதல் வீடியோவே இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ”இதற்கடுத்து என்ன சேலஞ்ச் செய்ய போகிறீர் ஹாப்ஸ்” அவருக்கு கட்டம் கட்டி வருகிறார்கள் நெட்டிசன்ஸ். உஷாரா இருங்க ப்ரோ.

 

 

 

-ம. சக்கர ராஜன்,

மாணவப் பத்திரிகையாளர்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close