Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்...’ அழைப்பு விடுத்துள்ள வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை

இவ்வாண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை, "தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!" என்ற தலைப்பில் விழா நடத்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஏற்பாடு  செய்துள்ளது.

பேரவைத் தமிழ் திருவிழா

இது குறித்து, பேரவையின் செயலாளர் இரமாமணி செயபாலன் விடுத்துள்ள அழைப்பில், 
“பூமிப்பந்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது தமிழ் மரபையும், பாரம்பர்யத்தையும் (ஏறுதழுவுதல் உள்பட) கட்டிக் காப்பது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அவ்வகையில் இவ்வாண்டு பேரவையின் தமிழ் விழா கருப்பொருள் "தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!" என்பது சாலச்சிறந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரவைத் தமிழ் திருவிழா

இந்த விழா வட அமெரிக்காவில் உள்ள ‘மினியாபொலிஸ்’ நகரத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதில், தெரிவித்துள்ளார்.
விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகன், விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் போராடிவரும் நிலையில் தமிழர் கலையைப் போற்றிடுவோம் என்று கூறி அமெரிக்காவிலிருந்து அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close