Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“வாட்டர் போர்டிங்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைக்கும் சித்திரவதை...!

டொனால்ட் ட்ரம்ப்

அவன் தண்ணீரில் மூழ்குபவனைப் போல் அவதியுற வேண்டும்;
ஆனால் மூழ்கமுடியாது !

 - அமெரிக்க லெப்டினென்ட் க்ருவர் பிளின்ட்

 ‘வாட்டர் போர்டிங் என்னும் கொடிய சித்திரவதை முறை’:

'வாட்டர் போர்டிங்' என்பது தண்ணீரைப் பயன்படுத்தி சித்ரவதைக்கு உள்ளாக்கும் முறையாகும். கைதிகளிடம் இருந்து உண்மையைப் பெற இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

நீளமான பலகையின் மீது ஒருவரைப் படுக்க வைத்து, அவரைக் கட்டிவைத்து, தலைப்பக்கம் உள்ள பலகையை கீழ்நோக்கி சாய்த்து முகத்தை துணியால் மூடி தண்ணீரை மேல்நோக்கி வாய் மற்றம் மூக்கில் ஊற்றுவார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு மூச்சுத்திணறல், தாங்கமுடியாத வலி ஏற்படும். நுரையீரல் நீரில் மூழ்கிய உணர்வை ஏற்படுத்தும். ஆக்சிஜன் குறைவதால், மூளை மற்றும் நுரையீரல்கள் பாதிக்கப்படும்.

நூற்றாண்டு பழமையான இம்முறையை இரண்டாம்  உலகப்போரின் போது ஜப்பான், அமெரிக்க போர்வீரர்களிடம் விசாரணைக்கு பயன்படுத்தியது. அமெரிக்கா , வியட்னாம் போரில் பயன்படுத்தியது.  வியட்நாம் போரிலும் அமெரிக்கா பயன்படுத்தியது. அமெரிக்க போர் வீரர்களுக்கான பயிற்சியில் தற்போதும் இது ஓர் அங்கமாக உள்ளது. 

“செப்டம்பர் 11 தாக்குதல்”
அமெரிக்க புலனாய்வு அமைப்பான C.I.A,  செப்டம்பர் 11 தாக்குதலில் பிணைக் கைதிகளாகப் பிடிபட்ட மூவரின் மீது செயல்படுத்தியது. அபு ஜூபய்தா (Abu Zubaydah) மீது 83 முறையும், abd al-rahim al-nashiri மீது இருமுறையும் காலித் ஷேக் முகமது (Khalid sheik Mohammed)  மீது 183 முறையும் இந்தமுறை செயல்படுத்தபட்டுள்ளது. 

ஜார்ஜ் டபிள்யூ புஷ்-க்கு பின்பு அமெரிக்க அதிபரான ஒபாமா, இந்த கொடிய விசாரணை முறையை தடைசெய்தார். தற்போது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இந்த முறையை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்.

இதுபற்றி டிரம்ப் கூறுகையில், "மத்திய கிழக்கு நாடுகளில் தலைகளை வெட்டும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பழைமையான சித்ரவதைக்கு பதிலடியாக ஐ.எஸ் அமைப்பின் மீது 'வாட்டர் போர்டிங்' முறையைப் பயன்படுத்துவது சரியானதே. நெருப்பை நெருப்பால்தான் எதிர்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

- ஜீவிதா பால்ராஜ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close