Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிளேபாய்' கவர்ச்சிப்புயலுக்கு வந்த சோதனை!

2008-ம் ஆண்டு அமெரிக்க முன்னணி அடல்ட் இதழான பிளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்து பிரபலமான மாடல் கவர்ச்சிப்புயல் ஸ்லோபோடன்கா. இவர் ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள போஸ்னியா நாட்டைச் சேர்ந்தவர். போஸ்னியா நாட்டின் தேடப்படும் குற்றவாளி மற்றும் பிரபல லோக்கல் ரவுடி, சட்ரேல். இவரது எதிரி டார்க்கோ எல்லீஸ்.  சட்ரேலைக் கொலை செய்ய எல்லீஸ் பல நாட்களாகத் திட்டமிட்டிருந்தார். பெண்ணை வைத்து சட்ரேலை மயக்கத் திட்டமிட்டர். அதன்படி   ஸ்லோபோடன்காவை சட்ரேலுடன் நட்பாகப் பழக வைத்தார். பின்னர் ஸ்லோபோடன்காவின் நடிப்பை காதல் என்று நம்பி, சட்ரேல் அவரது வலையில் விழுந்தார். ஒரு நாள் சட்ரேலை ஸ்லோபோடன்கா திட்டமிட்டு எல்லீஸ்ஸின் இடத்துக்கு வரவழைத்து, அவரை எல்லீஸின் ஆட்கள் எரித்துக் கொலை செய்யத் தீட்டம் தீட்டி இருந்தனர். அதன்படி ஸ்லோபோடன்கா எல்லீஸின் ஏரியாவுக்குள் சட்ரேலை மயக்கிக் கூட்டி வந்தார். அங்கு நடந்த தீ தாக்குதலில் இருந்து சட்ரேல்  சாமர்த்தியமாகத் தப்பினார். பின்னர் இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட இன்டர்போல், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியது.


 

தாதா சட்ரேலைத் திட்டமிட்டு கொலை செய்ய உதவிய ஸ்லோபோடன்காவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கோர்ட் உத்தரவிட அதனை எதிர்த்து ஸ்லோபோடன்கா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு முடியும் வரை ஸ்லோபோடன்காவும் அவரது தாயாரும் தங்களது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். தற்போது காவலுக்கு இருந்த போலிசாரை ஏமாற்றி, ஸ்லோபோடன்கா அண்டை நாடான செர்பியாவுக்குத் தலைமறைவாகிவிட்டதாக இன்டர்போல் தரப்பு தெரிவிக்கிறது. ஸ்லோபோடன்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுள்ளார். 


 

  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close