Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிக்கலில் சிக்கியது டைம் வார்னர் இணைய சேவை!

நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் ஸ்க்னெய்டர்மேன், டைம் வார்னர் இணைய சேவை நிறுவனம் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதன்படி, டைம் வார்னர் இணைய சேவை நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.  'வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாத அளவுக்கு அதிவேக இணைய சேவை அளிக்கப்போவதாக அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. அதற்கேற்றார்போல் அதிக கட்டணம் வசூலித்துவிட்டு, குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்கி, பல மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார். டைம் வார்னர் நிறுவனம் இதுபோன்ற பிரச்னையில் சிக்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் வாடிக்கையாளர் ஒருவர், முன் அறிவிப்பு இல்லாத அதிக கட்டண வசூல் செய்ததற்காக, வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு வழங்கவேண்டிய நஷ்ட ஈடு முழுமையாக வழங்கப் படவில்லை. இது அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய சிக்கலில் சிக்கியுள்ளது.   

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close