Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017-ல் டெக்கீஸ்களுக்கே நல்ல சம்பளம்: சொல்வது லிங்க்ட் இன்

லிங்க்ட் இன் நிறுவனம் தன்னிடம் இருக்கும் டேட்டாக்களை பயன்படுத்தி, அதிக சம்பளம், பணி நிரந்தரம், பணிக்கான வரவேற்பு, ஆண்டுக்கு ஆண்டு அந்த பணிக்கான தேவை அதிகரிப்பது, பணி உயர்வு கிடைப்பது போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு 2017-ம் ஆண்டில் உலகில் எந்த பதவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.  

அதில் சைட் ரிலையபிளிட்டி பொறியாளர்கள் பணிக்குத் தான் முதல் இடம் கொடுத்திருக்கிறது. அதோடு வருங்காலங்களில் டெக்னாலஜி சார்ந்த பதவிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தான் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, டெக்னிக்கல் ப்ரோகிராமர், டேட்டா ஆர்கிடெக்ட், அனலிடிக்ஸ் மேனேஜர், டேட்டா பொறியாளர், ஸ்க்ரம் மாஸ்டர், ப்ரோகிராம் மேனேஜர், மென்பொருள் பொறியாளர், விற்பனை பொறியாளர், வாடிக்கையாளர் மேனேஜர், பிசினஸ் அனலிஸ்ட், ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் போன்ற பதவிகளை பட்டியலிட்டிருக்கிறது. அதோடு உலகின் கடினமான வேலைகளில் பொறியாளர்கள் வேலைக்கு இரண்டாவது இடம் கொடுத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close