Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

300 திமிங்கிலங்கள் தற்கொலை...நெஞ்சை உலுக்கும் காரணங்கள்..! #MassStranding

நியூஸிலாந்து மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை ஒன்றில் 400க்கும் அதிகமான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. அதில் 300க்கும் அதிகமானவை இறந்துவிட்டன. மற்ற திமிங்கிலங்களைக் கடலில் சேர்க்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் கடலில் சேர்த்த 100 திமிங்கிலங்கள் அடுத்த சில மணி நேரத்திலே மீண்டும் கரை ஒதுங்குகின்றன. 

இப்படி திமிங்கிலங்களும், டால்ஃபின்களும் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி இறக்கும் நிகழ்வை Mass stranding என்றழைக்கிறார்கள். நியூஸிலாந்தின் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய mass stranding ஆக இருக்கலாம் என அச்சப்படுகிறது நியூஸிலாந்து.

 


Mass stranding எதனால் நிகழ்கிறது?

1) வயதான திமிங்கிலங்களால் அதன் எடையைத் தூக்கிக்கொண்டு நீந்துவது சிரமம். ஒரு கட்டத்தில் தன்னால் நீரில் இருக்க முடியாது எனத் தெரிந்ததும் தானாகக் கரை ஒதுங்கி உயிரை விடும். 

2) திமிங்கிலங்களும் நோய்வாய்ப்படும். அப்படி எதாவது நோய் அதிகம் தாக்கினால், அதன் உடல் பாகங்கள் செயல்படாமல் போகலாம். அதனால் தானாக கரை ஒதுங்கலாம். தொற்று நோய் போல ஏதாவது பரவினால், கூட்டம் கூட்டமாக திமிங்கிலங்கள் கரை ஒதுங்கும்.

3) உணவுப்பற்றாக்குறை மனிதனுக்கு மட்டுமல்ல. திமிங்கிலங்களுக்கும் நடக்கும். அந்தப் பகுதியில் அதிகமான மீன்களை நாம் திருடித் தின்றுவிட்டால், திமிங்கிலங்கள் பசியில் வாடி கரை ஒதுங்கும். 

4) கப்பல் மோதியோ, வேறு காரணங்களாலோ காயம்பட்ட திமிங்கிலங்களும் கரை ஒதுங்கும்.

5) தனது இரையை ஃபாலோ செய்து வரும்போது, வழித் தவறி கரைக்கு வரும் திமிங்கலங்களும் உண்டு. கடலுக்குள் லேண்ட்மார்க்கா வைத்துக் கொள்ள முடியும்?

6) திடீர் என பருவகாலத்தில் மாற்றம் வந்தால், செய்வதறியாது திமிங்கிலங்கள் இப்படி கரை ஒதுங்கும்.

7) இவை எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. ஆழ்கடலில் இருக்கும் திமிங்கிலங்கள் ஒரு சமூகமாகவே வாழும். ஏதாவது ஒரு காரணத்தால் கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள் மற்ற திமிங்கிலங்களுக்கு சிக்னல் அனுப்பும். உடனே கூட்டம் கூட்டமாக மற்றவையும் கரை ஒதுங்கி தன் உயிரை விடும். 

நியூஸிலாந்தில் இப்படி நடப்பது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு விஷயம்தான். ஆனால், நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் Mass stranding செய்வது எப்போதாவதுதான் நடக்கும். 1918 ல் Chatham islandல் ஆயிரக்கணக்கான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. அதன் பின் 1985ல் 450 திமிங்கிலங்கள் மடிந்தன. இப்போது நடந்திருப்பது மூன்றாவது பெரிய சம்பவம்.

திமிங்கிலங்கள்

தகவல் பரவியதும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் விரைந்து வந்து, அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டார்கள். அவர்களுக்கும், திமிங்கிலங்களைக் கையாளத் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் திமிங்கிலங்கள் மூர்க்கமாக இருக்கும் என்பதால் இரவில் யாரும் கடற்கரையில் தங்கவில்லை. 

இதற்கு PETA வரவில்லையே என்ற குரல் இணையம் எங்கும் எழுந்திருக்கிறது. அது இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுதுமிருந்தே கேட்கிறது. 

-கார்க்கிபவா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close