Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவிற்கு ஆபத்து: ட்ரம்ப் அதிர்ச்சி ட்விட்! #TravelBan

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின், கடந்த 4-ம் தேதியில் இருந்து தற்போது வரை 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 4-ம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் ட்ரம்ப் தடை விதித்த 7 நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 3,000 பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இதே கால இடைவெளியில் 1,817 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது சட்ட அமைப்பு உடைந்துவிட்டது. சந்தேகத்திற்குரிய ஏழு நாடுகளிலிருந்து அகதிகளாக தஞ்சம் கேட்டு வருபவர்களில் 77 சதவிகிதம் பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது' எனத் தெரிவித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close