Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1,000 அடி உயரக் கட்டடத்தில் ரஷ்ய மாடல் செய்தது சாகசமா... சேட்டையா?!

துபாயில் 1,000 அடி உயரக் கட்டடத்தில் தன் ஆண் நண்பரின் கையைப் பிடித்துக்கொண்டு உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் சாகசம் செய்த ரஷ்ய மாடல் அழகிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

உயிரை பணயம் வைத்த ரஷ்ய மாடல்

அட்வென்சரை விரும்பும் மக்கள் உலகம் முழுக்க நிறைந்து இருக்கிறார்கள்.  இதற்காக அவர்கள் எந்தவிதமான துணிச்சலான முடிவையும் எடுப்பார்கள். அதில் பல, உயிரைப் பணயம் வைக்கும் விஷயமாகவும் இருக்கும். 'டிஸ்கவரி' பேர் கிரில்ஸ் போல, உலகம் முழுக்க `அட்வென்சர்’ விரும்பிகள் பரவி இருக்கின்றனர். உயர்ந்த கட்டடத்தில் எந்த உதவியும் இல்லாமல் ஏறுவது, இயந்திரத்தின் உதவியுடன் விமானத்துடன் இணைந்து பறப்பது போன்ற அசாத்திய விஷயங்களை நிகழ்த்துவார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகி விகி ஓடின்ட்கோவா (Viki Odintcova) அந்த ரகம்தான். உலகம் முழுக்க பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக உள்ளார். ரஷ்யாவின் முன்னணி விளம்பர மாடலும் கூட. 

உயிரைப் பணயம் வைத்த மாடல் அழகி

இவருக்குத் தன் துணிச்சலை வித்தியாசமான முறையில் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றொரு விபரீத ஆசை. உலகமே தன்னைத் திரும்பி பார்ப்பதற்காக ஒரு திட்டம் தீட்டினார். துபாயில் ஆயிரம் அடி உயரம் கொண்ட கட்டடத்தில் எந்த உதவியும் இல்லாமல் தன் ஆண் நண்பரின் கையை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் பறக்க முடிவு செய்தார். இந்தத் திட்டம் குறித்து தன் நண்பரும் புகைப்படக் கலைஞருமான அலெக்சாண்டர் திகோமிரோவிடம் தெரிவித்தார். அவரும் `ஓகே... லெட்ஸ் கோ’ என்றார்.

ரஷ்ய மாடல் அழகி

உடனடியாக இருவரும் ரஷ்யாவில் இருந்து துபாய் சென்றனர். துபாயில் உள்ள கேயன் டவர் (Cayan Tower) 1,004 அடி உயரம் கொண்டது. துபாயின் உயரமான கட்டடங்களில் இதுவும் ஒன்று. 70 மாடிகள் கொண்டது. விகி, அலெக்சாண்டர் இருவரும் அந்தக் கட்டடத்தின் உச்சிக்குச் சென்றனர். கட்டடத்தின் நுனியில் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு அலெக்ஸ்சாண்டர் நின்று கொள்ள, அவரது ஒற்றைக் கையை பிடித்துக் கொண்டு விகி அந்தரத்தில் தொங்கினார். அப்போது அவள் வேறு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்திருக்கவில்லை. அலெக்ஸாண்டரின் பிடியில் இருந்து அவளது கை நழுவினால், ஓர் எலும்பு கூட மிஞ்சி இருக்காது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது அந்த கட்டட நிர்வாகத்துக்குத் தெரியாது. இருவரும் யாரிடமும் அனுமதி பெறவில்லை. இப்படி ஒரு ஆபத்தான செயலை நிகழ்த்தி விட்டு, இருவரும் துபாயில் இருந்து `எஸ்கேப்’ ஆகி விட்டனர். அதோடு நிற்காமல், அந்தக் கட்டடத்தில் அலெக்ஸாண்டரின் கையை பிடித்துக் கொண்டு தொங்கும் தன் புகைப்படத்தை, விகி ‛இன்ஸ்டாகிராம்’ல் வெளியிட்டார்.

மாடல் அழகியான விகியை `இன்ஸடா’வில் 32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஒரு லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். அதோடு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதை 51 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 4.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

அந்தரத்தில் தொங்கும் மாடல்

துணிச்சலை நிரூபிக்கும் வகையில் விகி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விகியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 'உயிருக்கு ஆபத்தான இது போன்ற செயல்களை செய்வது இளைய தலைமுறைக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும்' என பலரும் கண்டித்துள்ளனர். சிலர், 'உங்களுக்கு அழகை கொடுத்த கடவுள் அறிவைக் கொடுக்கத் தவறிவிட்டார்' என்றும் விமர்சித்துள்ளனர். 

-எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close