Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஞ்சத்தின் பிடியில் சோமாலியா

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, கடுமையான பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. மேலும் தெற்கு சூடானின் சில பகுதிகளும் பஞ்சத்தில் இருப்பதாக ஐநா அறிவித்துள்ளது. 2011-ம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை விட, இது கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


தெற்கு சூடான், நைஜிரியா, யேமன் மற்றும் சோமாலியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் உலக நாடுகள், பஞ்சத்தைப் போக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. Save the Children அமைப்பு, நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தாமதமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டில், ஏற்பட்ட பஞ்சத்தில் 50,000 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார், 2,60,000 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஏற்படவுள்ள உணவுப் பஞ்சம் அதனைவிட கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ENGLISH OVERVIEW

Somalia famine fears, UN call for for 'immediate and massive' reaction

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close