Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிராட் சிறந்த தந்தை - ஏஞ்சலினா

பிரபல ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவரும் பிரபல ஹாலிவுட் ஸ்டாருமான பிராட் பிட்டுடன் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திந்தார். ஏஞ்சலீனா ஆறு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பிராட் அதிகமாகக் குடிக்கிறார். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என ஏஞ்சலீனா சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டி இருந்தார். இதனை அடுத்து பிராட் மீது குழந்தைகள் வன்முறை சட்டம் பாய, போலிசார் அவரது நடவடிக்கைகளை சோதனை இட்டனர். தான் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்வதாக கூறிய பிராட், ஏஞ்சலீனாவின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்தார். நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளித்தது. இருவருக்கும்  விவாகரத்து ஆகி பிரிந்தாலும், தாங்கள் குழந்தைகள் எதிர்காலம் கருதி ஒரே குடும்பமாகவே இருக்கப் போவதாகவும், தனக்கும் பிராட்டுக்கும் தான் கருத்து வேறுபாடே தவிர, பிராட் தன் குழந்தைகளுக்கு  சிறந்த அப்பா எனவும் ஏஞ்சலீனா பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

ENGLISH OVERVIEW

பிராட் சிறந்த தந்தை

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close