Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளிய மோடி!

ஃபேஸ்புக்கில் அதிகம் பின் தொடர்வோரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்றுள்ள பல்வேறு முக்கியத் தலைவர்களின் ஃபேஸ்புக் பக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வது தெரியவந்துள்ளது. அதேபோல, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வதால், அவர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அதேபோல இந்தியப் பிரதமர் அலுவலக ஃபேஸ்புக் பக்கத்தை, சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close