Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியரின் கொலைக்கு ட்ரம்ப் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் - ஹிலாரி கிளின்டன் ஆவேசம்!

ஹிலாரி கிளி/ன்டன்

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், கடந்த புதன்கிழமை ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை, ஆதம் புரின்டன் என்பவர் 'என் நாட்டைவிட்டு வெளியேறு’ என்று கூச்சலிட்டுக் கொன்றது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா மரணம்குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

ஹிலாரி கிளின்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதற்கு, நாட்டின் அதிபர்தான் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. குற்றங்களை ஒடுக்கவேண்டிய  நடவடிக்கைகளை ட்ரம்ப் முடுக்கிவிடுவதோடு, இதுகுறித்து பதில் சொல்லியாக வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close