Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயில் வடிவத்தில் ஜொலித்த பக்கிங்ஹாம் அரண்மனை!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில், பக்கிங்ஹாம் அரண்மனையில், இங்கிலாந்து-இந்தியா கலாசார ஆண்டு நிகழ்ச்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக, இந்தக் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான பிரதிநிதிகள், இந்தியா சார்பில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ இளவரசருமான பிலிப், கேம்ப்ரிட்ஜ் இளவரசர் வில்லியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், சித்தார் இசைக்கலைஞர் அனோஷ்கா சங்கர், நடிகர்கள் குணால் நய்யார், நேஹா கபூர் மற்றும் ஆயிஷா தார்கர் உள்ளிட்டோரும் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்கிங்ஹாம் அரண்மனை மயில் வடிவ ஒளி விளக்குகளால் ஜொலித்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close