Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் இந்தியரின் வீட்டுமீது தாக்குதல்

அமெரிக்காவின் தெற்கு கொலரேடோ நகரில் வசிக்கும் இந்தியரின் வீட்டில் பிப்ரவரி 6 ம் தேதி மர்ம நபர்கள் முட்டை மற்றும் நாயின் கழிவுகளை வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறும்போது, வீட்டைச் சுற்றி 40 க்கும் மேற்பட்ட முட்டைகளை வீசியுள்ளனர். நீ பழுப்பு நிறத்தவன், நீ அமெரிக்காவைச் சேர்ந்தவன் அல்ல என்ற வாசகங்கள் அடங்கிய காகிதத்தையும் எழுதி வீட்டிற்குள் வீசியுள்ளனர் என்று தெரிவித்தார். கன்சாஸ் பகுதியில் இந்தியரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் அமெரிக்கர்களுக்கு, இந்தியர்மீது இன ரீதியான வெறுப்பு இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close