Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கான்சஸ் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கான்சஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அமெரிக்காவில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்குக் கண்டனம்.

அதேபோல  யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, தனிக்குழு ஒன்றை அமைக்க நீதித்துறைக்குப் பரிந்துரைத்துள்ளேன்.

Donald Trump

உலகிலேயே சிறந்த நாடாக அமெரிக்காவை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்காக, வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். அமெரிக்காவின் வருங்காலத்தைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டேன். குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் செய்த பிறகு, அமெரிக்கர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது.

தீவிரவாதத்திடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக, மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவது உறுதி' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close