Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எச்1 பி பிரிமியம் விசாவுக்கு அமெரிக்கா தடை!

வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வதற்காக வழங்கப்படும் எச்1 பி விசாவை பிரிமியம் முறையில் பெறுவதற்கு ஆறு மாதம் அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்குச் சென்று வெளிநாட்டினர் வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசால் எச்1 பி என்ற விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவைப் பெறுவதற்கு ட்ரம்ப் அரசு இரண்டு மாதத்துக்கு முன்பு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எச்1 பி விசா இரண்டு முறையில் வழங்கப்படுகிறது. சாதாரண முறையில் விசா பெறுவதற்கு மூன்று மாத காலத்துக்கும் மேல் நேரம் எடுக்கும். ஆனால் பிரிமியம் முறையில் விசா பெறுவதற்கு 75,000 ரூபாய் செலுத்தி 15 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது, பிரிமியம் முறையில் விசா பெறுவதற்கு ஆறு மாதத்துக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 3-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதிகமானோர் பிரிமியம் முறையில் விசா பெறுவதற்கு விண்ணப்பிப்பதால், சாதாரண முறையில் எச்1 பி விசா பெறுவதற்கு அதிகமாக காலதாமதமாகிறது. இதனைக் குறைப்பதற்காகவே சிறிது காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க குடியுரிமை ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close