Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பின் போன் கால்கள் ஒட்டுக்கேட்கப்படவில்லை...

அமெரிக்க அதிபர்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தன்னுடைய போன் கால்கள், ஒபாமாவின் உத்தரவின் பேரில் ஒட்டுக் கேட்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டிற்கான எந்த ஆதாரங்களையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய புலனாய்வு இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பர் "அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. ட்ரம்ப்போ அல்லது அவர் கட்சியைச் சேர்ந்த யாருடைய போன் கால்களும் ஒட்டுக்கேட்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ட்ரம்ப்புக்கும் ரஷ்யாவுக்கும் ரகசியத் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதைக் கண்காணிக்க, அமெரிக்காவின் சிறப்புப் புலனாய்வு நீதிமன்றமான ஃபிஸா (Fisa) , ட்ரம்ப் மற்றும் அவரின் குழுவினரைக் கண்காணிக்க சட்ட ரீதியில் வாரண்ட் அனுமதி தரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதையும் ஜேம்ஸ் க்ளாப்பர் தற்போது மறுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப்  பதவியேற்ற ஜனவரி 20 அன்று, தன் பதவியைவிட்டு க்ளாப்பர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close