Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்குத் தடை... ட்ரம்ப் அதிரடி.

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட 6 நாடுகளிலிருந்து, அமெரிக்க குடியேற்றத்தைத் தடை செய்து புதிய குடியேற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். ஏமன், சிரியா, இரான், சூடான், லிபியா, சோமாலிய ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடுத்த 90 நாட்களுக்கு யாரும் குடியேற முடியாது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தகுந்த விசா அனுமதியோடு குடியிருப்பவர்கள் மற்றும் க்ரீன் கார்டு ஹோல்டர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. 

இந்த புது உத்தரவு மார்ச் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜனவரியிலும் இது போன்ற ஒரு உத்தரவை, கால அவகாசம் தராமல் உடனடியாக ட்ரம்ப் அமல்படுத்தியது பலவித குழப்பங்களை ஏற்படுத்தியதோடு, கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது. அதிலிருந்து சில மாற்றங்களை செய்து இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இராக் விடுபட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close