Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பூர்வ வேலை உரிமையைப் பறிக்கும் டிரம்ப்? இந்தியப் பெண்கள் வேலை இழக்கும் அபாயம்!

டிரம்ப்

ஹெச்1-பி விசா கட்டுப்பாடு, கட்டணம் உயர்வு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் என்று பல்வேறு அதிரடிகளைக் காட்டிவரும் டிரம்ப் அரசு, அடுத்ததாக ஹெச்1-பி விசாவை அடிப்படையாகக் கொண்டு, ஹெச்4 விசா வாங்கி, அமெரிக்காவில் வேலை பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது. 'அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பேன்' என்று சொல்லி ஆட்சியைப்பிடித்த டிரம்ப் அரசு, சட்டத்துக்குப்புறம்பாகக் குடியேறியவர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதுடன் நில்லாமல்... சட்டப்பூர்வமாகப் பணியாற்றப் பெற்ற உரிமையையும் ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துவருகிறது. 

அமெரிக்காவுக்கு வேலை பார்க்க வருபவர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 85,000 ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இதில், 70 சதவிகிதத்தை இந்தியர்கள்தான் வாங்குகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஐ.டி தொடர்பான பணிக்காக அமெரிக்கா செல்பவர்களாக இருக்கின்றனர். ஹெச்1-பி விசா கட்டணத்தைச் சமீபத்தில் அமெரிக்கா அதிகரித்தது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியது. 

ஹெச்1-பி விசா வாங்கி அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்பவர்கள், தங்கள் மனைவி, 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல ஹெச்4 விசா வழங்கப்படுகிறது. ஹெச்4 விசா வைத்திருப்பவர்கள், ஹெச்1-பி விசா உள்ளவரைச் சார்ந்தவராகக் கருதப்படுவர். ஹெச்4 விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற முடியாது. பணியாற்ற வேண்டும் என்றால், வேறு விசாதான் வாங்க வேண்டும். இதனால், என்னதான் படித்திருந்தும், படிப்பும் திறமையும் வீணாகப்போகும் நிலை உள்ளது. சில விதிகளைத் தளர்த்தி, ஹைச்4 விசா வைத்திருப்பவர்கள் பணியாற்றச் சட்டப்பூர்வமான அனுமதியை அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுந்துவந்தது. 

இதைத் தொடர்ந்து, சில கட்டுப்பாடுகளுடன் வேலை செய்யும் அனுமதியை அளிக்க அமெரிக்க அரசு இறங்கிவந்தது. அதாவது, ஹெச்1 விசா வைத்திருக்கும் எல்லோரும் வேலை பார்க்க முடியாது. ஹெச்1-பி விசா வைத்திருப்பவர், கிரீன் கார்டு (நிரந்தரக் குடியுரிமை) பெற, அவர் பணியாற்றும் நிறுவனம் விண்ணப்பித்து, அதை ஏற்று ஃபார்ம் 1-140 அனுமதி அவர் பெற்றிருந்தால் மட்டுமே  அவரைச் சார்ந்து ஹெச்4 விசா வைத்திருப்பவர் பணியாற்றலாம் என்று 2015-ல், ஒபாமா ஆட்சிக்காலத்தில், அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏராளமான இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

இதை எதிர்த்துச் 'சேவ் ஜாப்ஸ் யு.எஸ்.ஏ' என்ற அமைப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால், 'அரசு கொண்டுவந்த இந்த விதிக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதன்பிறகு அமைதியாக இருந்த சேவ் ஜாப் அமைப்பு, டிரம்ப் ஜனாதிபதியானதும் மீண்டும் பிரச்னையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் இந்த அமைப்பு மேல்முறையீட்டைச் செய்துள்ளது. ஒபாமா ஆட்சிக்காலத்தில், 'வழக்கைத் தள்ளுபடிச் செய்ய வேண்டும்' என்ற அமெரிக்கச் சட்டத்துறை, இப்போது, 'இதுதொடர்பாக ஆய்வுசெய்ய கால அவகாசம் தேவைப்படுவதால், 60 நாட்களுக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறது. 

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவில், சட்டப்பூர்வமாகக் குடிபெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.பிரவீன் குமார் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close