Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதவியிலிருந்து தென்கொரிய அதிபர் நீக்கம்! - நீதிமன்றம் அதிரடி

தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹையை பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டு தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

South Korean President Park Geun Hye

தென் கொரிய அதிபர் குவெனின் தோழி சோய் சூன் சில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். குறிப்பாக, அதிபருடனான நெருக்கத்தை வைத்து சோய் ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, குவெனுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஊழலுக்கு பொறுப்பேற்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் குவெனுக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

பின் அவர் அதிபர் பதவியில் இருந்து ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார். இதுதொடர்பான வழக்கு அந்த நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்ற தீர்மானத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால், தென் கொரியாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close