Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க-இந்தியர் கடைக்கு ஃப்ளோரிடாவில் தீ வைப்பு!

Florida

அமெரிக்காவில், சமீப காலமாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், இந்தியர் ஒருவர் வைத்திருந்த கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு தீ வைத்த அமெரிக்கரை விசாரித்த போது, இந்திய-அமெரிக்கரை அவர் முஸ்லீம் என்று தவறாக எண்ணியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 64 வயதாகும் ரிச்சர்ட் லாய்டு என்ற நபர், 'அரேபியர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் செய்யும் செயலுக்கு, அவர்களை அமெரிக்காவில் இருந்து விரட்ட வேண்டும்' என்ற எண்ணத்துடன்  இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க போலீஸ் தரப்பு, 'இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். தீ வைத்த கடைக்கு சொந்தக்காரர்கள் இந்திய வம்சாவளியைச் சேரந்தவர்கள். ஆனால், லாய்டு அவர்களை அமெரிக்கர்கள் என்று நினைத்துள்ளார். லாய்டு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினர்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close