Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்வு!

அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் காணப்படுவதால்,அங்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75% ஆக இருந்தது. தற்போது 1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Janet yellen
 

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அமெரிக்க மத்திய வங்கியின் பொதுக்குழுத் தலைவர் ஜேனட் யெல்லென்,”அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது.

வேலையின்மை வீழ்ச்சி அடைந்து வருகிறது. எனவே, வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளோம். வரும் மாதங்களில் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது’ என்றார். 

இதனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close