Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெற்கு சூடானில் கடத்தப்பட்ட இந்தியர்கள்... பணம் கேட்டு மிரட்டும் கிளர்ச்சியாளர்கள்!

South Sudan

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. அங்கு வேலைபார்க்கும் இந்தியர்கள் இருவரை கிளர்ச்சியாளர்கள் கடத்திச்சென்றனர். தற்போது, கடத்திச்சென்ற இரண்டு இந்தியர்களை விடுவிக்க, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கேட்கின்றனராம் கிளர்ச்சியாளர்கள். 

 'தெற்கு சூடான் அரசு, தீவிரவாதிகளுக்கு எந்தப் பணமும் கொடுக்காது. நாங்கள், சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐ.நா. வழிமுறைகளுக்கும் உட்பட்டு செயலாற்றி வரும் அரசு, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்.' என்று தெற்கு சூடான் அரசு கூறிவிட்டது.

கடந்த மார்ச் 8-ம் தேதி, அம்ப்ரோஸ் எட்வர்ட் மற்றும் முக்கி விஜய பூபதி (Ambross Edward and Muggy Vijaya Boopathy) ஆகிய இரு இந்தியர்கள் கடத்தப்பட்டனர். தற்போது, தெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சியாளர்கள் அவர்களை விடுவிக்க, பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இந்த விஷயம் குறித்து இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால், சூடான் அரசையே தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய அரசு கூறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close