Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரீஸில் பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்ற நபர் சுட்டுக் கொலை!

Orly airport

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஒர்லி விமான நிலையத்தில் (Orly Aiport), அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்க முயன்றுள்ளார். இதனால், அவரைச் சுற்றி வளைத்த பிற காவலர்கள் வேறு வழியின்றி சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பாரீஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், இதனால் 15 விமானங்கள் பக்கத்தில் இருந்த வேறொரு விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

Orly airport

கொல்லப்பட்ட நபரின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது பற்றி பிரான்ஸ் நாட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டு அரசு, 'அடையாளம் தெரியாத நபர் ஒருவர், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரை தாக்கி, அவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த மற்ற காவலர்கள், மக்களையும் பெண் பாதுகாவலரையும் காக்க, அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால், அந்த நபர் இறந்துள்ளார்.' என்று கூறியுள்ளது.

இந்த சம்பவத்தால், ஒர்லி விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close