Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ராக் அண்டு ரோல்’ புகழ் சக் பெர்ரி 90 வயதில் மரணம்

Chuck berry

அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான சக் பெர்ரி, மிஸ்ஸோரி மாகணத்தில் காலமானதாக அம்மாகண போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது. அவருக்கு 90 வயது.

1926-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பிறந்தார் சக் பெர்ரி என்னும் சார்லஸ் எட்வார்டு ஆண்டர்சன் பெர்ரி. பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்த பெர்ரி, மிஸ்ஸோரி மாகாணத்தில்தான் வளர்ந்தார்.

தனது இளமைக் காலங்களில் சில குற்றங்களுக்காக சிறைக்குச் சென்ற பெர்ரி, 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இசைக் கலைஞராக பிரபலம் அடைந்தார். பாப் டிலன், சக் பெர்ரியை, 'ராக் அண்டு ரோலின் ஷேக்ஸ்பியர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பாடகர், பாடலாசிரியர், கிட்டாரிஸ்ட் என்ற பன்முகங்கள் கொண்ட சக் பெர்ரி, "Johnny B. Goode," "Roll Over Beethoven" மற்றும் "Sweet Little Sixteen" போன்ற பல புகழ்பெற்ற பாடல்களை வெளியிட்டுள்ளார். 

ரோலிங் ஸ்டோன் பத்திரிகை அவரை, '100 சிறந்த கிட்டாரிஸ்ட்களில் ஆறாவதாக' தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close