Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் கொலைவெறித் தாக்குதல் - மதபோதகருக்கு கத்திக் குத்து

இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார் டாமி, மெல்போனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வழிபாடுசெய்தபோது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவரை கத்தியால் குத்தினார்.

அமெரிக்காவில், இந்தியர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தன. அந்தச் சம்பவங்கள், உலக நாடுகள் மத்தியிலும் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக அமெரிக்காவில் மூன்று இந்தியர்களின் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன. அதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, சிகிச்சைபெற்றுவருகிறார். அந்தச் சம்பவங்கள் அமெரிக்காவில் இந்தியர்களின் பாதுகாப்பு மீது கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா தலைநகரான மெல்போர்னில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில், ஞாயிறன்று வழிபாடுசெய்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த டாமி என்ற பாதிரியாரை, அந்நாட்டைச் சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க ஒருவன் கத்தியால் குத்தியுள்ளார். அந்தத் தாக்குதல், இனவெறியின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

'பாதிரியார் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் நிச்சயம் இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகவோதான் இருக்க முடியும். அதனால்தான் குத்தியதாக' குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாதிரியார் டாமி, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்தச் சம்பவம், மெல்போர்னில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close