Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. 

Happy

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை, ஐ.நா-வின் Sustainable Development Solutions Network  வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 155 நாடுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.  ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளன. முதல்முறையாக, இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு நான்கு இடங்கள் இறங்கி உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, வருமானம், நம்பிக்கை, சுதந்திரம், பெருந்தன்மை ஆகியவை இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு வெளியான பட்டியலில் 14-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புருண்டி, தன்சானியா, சிரியா, ரவாண்டா ஆகிய நாடுகள், கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close