Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் தாயைக் கொன்ற இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது  இளைஞர், தன் தாயை கொலைசெய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Arnav Upplapati

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், நளினி டெல்லப்பேராலு என்ற இந்திய வம்சாவளிப் பெண், குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள். நளினி, கடந்த 2015-ம் ஆண்டு, தனது வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்போது அவரது கணவர் வேலைக்கு சென்றிருக்கவே, இதுகுறித்து அவரது மகன் அர்னவ் உப்பலபதி (அப்போது வயது 16) போலீஸுகு தகவல் கொடுத்தார். தற்போது இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பதும் அதே உப்பலபதிதான்.

இந்தச் சம்பவம், அவரது உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தாயை மகன் கொலைசெய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நளினியின் மரணம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், அவர் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், உயிரிழப்பதற்கு முன், அவர் தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான காயங்கள் சில அவரது முகத்தில் இருந்ததாம்.

அவர், எதற்காக தாயைக் கொன்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close