Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐ.எஸ் அமைப்பு அழிக்கப்படும்'- ட்ரம்ப் சபதம்

Donald trump

ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி (Haider al- Abadi) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களும், பல்வேறு வெளியுறவுக் கொள்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினர். முக்கியமாக, மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈராக் பிரதமர் அபாதி, 'ஐ.எஸ் அமைப்பை அழிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆதரவு தொடர மட்டும் செய்யாது, மேலும், அதிகரிக்கும். ஆனால், தீவிரவாதம் என்பது ராணுவத்தினால் மட்டும் அழித்திட முடியாது' என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், 'ஐ.எஸ் அமைப்பை அழிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அது மிகவும் கடினமானது. ஆனால், எங்கள் பிரதான நோக்கம் அந்த அமைப்பை வேரோடு அழிப்பது. அதை கண்டிப்பாக செய்து காட்டுவோம். அதற்கான செயல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது' என்று தெரிவித்தார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close