Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோலி கிரிக்கெட்டின் ட்ரம்ப் : கேலி செய்யும் ஆஸ்திரேலிய ஊடகம்!

கோலியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு, ஆஸ்திரேலியாவின் பத்திரிகை கேலி செய்துள்ளது.

Virat Kohli

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடந்துள்ள மூன்று டெஸ்ட்டில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இதற்கிடையே, மூன்றாவது டெஸ்ட்டில், கோலிக்கு காயம் ஏற்பட்டபோது, அவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், கேலி செய்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அது தவறான வீடியோ பதிவால் வெளியானதாகப் பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு, ‘The Daily Telegraph’ என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது. ‘டி.ஆர்.எஸ் விவகாரத்தில் கோலி கூறிய கருத்து, காயம் தொடர்பான பிரச்னையில் அவர் வார்னரைக் கேலி செய்தது போன்ற காரணங்களால்... கோலி, கிரிக்கெட்டின் ட்ரம்ப்’ என்று அந்தப் பத்திரிகை விமர்சித்துள்ளது. 

 ட்ரம்ப்பைப் போலவே, கோலி தன் மீது அடிக்கப்பட்ட முட்டையை மறைக்க ஊடகத்தைக் குறைகூறுகிறார் என அந்தப் பத்திரிகை விமர்சனம்செய்துள்ளது.

கோலியை மட்மல்லாமல், அந்தப் போட்டியில் வர்ணனை செய்த வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகியோரையும் அந்தப் பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close