Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் : மோடி கண்டனம்

இங்கிலாந்து நாடாளுமன்றம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

London attack
 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் பலியாகி உள்ளார். அதே நபர் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் வேகமாக காரை ஓட்டி வந்து சாலை ஓரத்தில் இருப்பவர்கள் மீது மோதி உள்ளார். இத்தாக்குதலில் நான்கு பேர் பரிதாபமாக பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 40க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த நபர் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான இங்கிலாந்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close