Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையாவை ஒப்படைப்பதற்கான கோரிக்கை... இங்கிலாந்து செயலாளர் ஒப்புதல்!

Vijay mallya

இந்தியாவில் தேடப்படும் முக்கிய நபர்களில் ஒருவர் தொழிலதிபரான விஜய் மல்லையா. தற்போது அவர் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தக் கோரியதால் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற மல்லையா, அதன்பின் இந்தியா திரும்பவே இல்லை. மல்லையாவை திரும்ப ஒப்படைக்கும்படி இங்கிலாந்து அரசிடம், இந்தியா தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தன.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே, 'கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் செயலாளர், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளது. இதையடுத்து, வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான சான்றிதழ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்று கூறினார்.

இதனால், விஜய் மல்லையா கூடிய சீக்கிரம் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close