Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லெக்கின்ஸ் பெண்களுக்கு, ’யுனைடெட் ஏர்லைன்ஸ்’ தடை விதித்ததற்குக் காரணம் இதுதான்!

லெக்கின்ஸ் அணிந்து வந்த இரண்டு பெண்கள், விமானத்தில் பயணம்செய்வதற்கு ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் தடை விதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Girls barred from flighting

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து மின்னியாபாலிஸ் நகருக்கு யுனைடெட் விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க வந்த இரண்டு பெண்களை, லெக்கின்ஸ் அணிந்திருந்த காரணத்தால், அந்த நிறுவனம் தடைவிதித்தது. அந்த இரு பெண்களில் ஒருவர், மாற்றுடை அணிந்த பின்னரே விமானத்தில் அனுமதித்தனர். 

இதுகுறித்து, சமூக வலைதளங்களில் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்த சூழலில், ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவின்படி, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானங்களில் பயணிப்பவர்களுக்கு எவ்வித ஆடைக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், அவர்களுக்கு உண்டான சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் உறவினர்களும், நண்பர்களும் ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆடைக் கட்டுப்பாடு சட்டம் இவர்களுக்குப் பொருந்தும். இந்த விதியின் அடிப்படையிலேயே அவ்விரு பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது என விளக்கமளித்துள்ளனர்.                

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close