Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.நா.-வின் அணுஆயுதத் தடை மாநாட்டில் இந்தியா பங்கேற்காது!

பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் சர்வதேச அணுஆயுதத் தடை குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில், இந்தியா பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UN

2016-ம் ஆண்டு, ஐ.நா. நடத்திய ‘அணுஆயுதத் தடை’ வாக்கெடுப்பு மாநாட்டில் 120 நாடுகள் பங்கேற்று வாக்களித்தன. இதில் ஒட்டுமொத்தமாக அணுஆயுதத் தடைசெய்வதற்கு மறுப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஓட்டளித்திருந்தன. அதே சமயம், சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தன.

அணுஆயுதப் பரவலைத் தடுக்கத் தடை என்பதை இந்தியா ஆதரிக்கிறது என்றபோதிலும், இதுகுறித்த தடை மட்டுமல்லாது, தீவிர ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வு தேவைப்படும் நிலையில், ‘அணு ஆயுதத் தடையில் ஆய்வு’ என்ற அம்சம் அவசியம் என இந்தியா கருதுவதால், தற்போதைக்கு வாக்கெடுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தது. 

மார்ச்-31 அன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை மாநாட்டில், இந்தியா பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close