Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோகோ கோலா கேன்களில் மனிதக் கழிவுகள்... அதிர்ச்சியடைந்த அயர்லாந்து போலீஸ்!

வடக்கு அயர்லாந்தில் இருக்கும் கோகோ கோலா நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கோகோ கோலா கேன்களில் மனிதக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வடக்கு அயர்லாந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு அயர்லாந்து போலீஸ் தரப்பு, 'இங்கு இருக்கும் லிஸ்பர்ன் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்துக்கு அசுத்தமான கோகோ கோலா கேன்கள் வந்திருப்பதாக புகார் வந்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளது.

கோகோ கோலா நிறுவனம், 'இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறோம். வடக்கு அயர்லாந்து போலீஸுக்கு எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறோம். மனிதக் கழிவுகளால் அசுத்தமான கேன்கள் அனைத்தையும் கண்டறிந்து விட்டோம். அதனை, கவனமாக அப்புறப்படுத்தியும் விட்டோம்' என்று கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close