Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் கிடைக்காததால் இளம் இன்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணத்துக்கு பெண் கிடைக்காததால், ரோபோட்டை திருமணம் செய்துகொண்டார். சீனாவில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், 'ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று சட்டம் பிறப்பித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக, பெரும்பாலான தம்பதிகள் ஆண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

china man got married to robet

இதனால், பெண்களின் எண்ணிக்கை அந்த நாட்டில் குறைந்தது. உலகிலேயே ஆண்-பெண் விகிதம் அதிக வேறுபாடு உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று. தற்போது, சீனாவில் திருமணத்தில் ஒரு புதிய முயற்சி நடந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ரோபோட்டிக்               இன்ஜினீயர், ஜெங் ஜியா ஜியா என்பவர் ரோபோவைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 31 வயது ஆகிறது.

அவர், திருமணம் செய்துகொள்ள நீண்ட காலமாக பெண் தேடியுள்ளார். திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளார். ஜெங் திருமணம் செய்துள்ள ரோபோவை அவரேதான் உருவாக்கினார். அந்த ரோபோவுக்கு, 'இங் இங்' என்று பெயர் வைத்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு, அவருடைய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள் சூழ சீனர்களின் முறைப்படி திருமணம் நடைபெற்றது. அவர்களுடைய  திருமண முறைப்படி பெண்ணின் முகத்தை மூடி, மணமகன் தூக்கிச் செல்வது வழக்கம். அதேபோல அவர், ரோபோவின் முகத்தை மூடி, தூக்கிச்சென்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close