Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாட்டரியில் கோடிகளை அள்ளிய இந்தியப் பெண்!

கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு, துபாய் அபுதாபியில் லாட்டரி சீட்டு பரிசுத் திட்டத்தில் 17.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 

Nishitha
 

கேரளாவைச் சேர்ந்த, குழந்தைகள் நல டாக்டர் நிஷிதா ராதாகிருஷ்ண பிள்ளை. இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன்   அமெரிக்காவில் வசித்துவருகிறார். நிஷிதா, அபுதாபியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அபுதாபியில் லாட்டரி சீட்டு விற்பனை இன்னும் அமலில் உள்ளதால், அங்கு வசித்தபோது,  லாட்டரி சீட்டுகளை வாங்கிக் குவிப்பாராம். அபுதாபியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபோதும் நிஷிதா லாட்டரி வாங்குவதை நிறுத்தவில்லை. தன் கணவரும் ஆன்லைனில் லாட்டரி வாங்குவதில் ஆர்வம் கொண்டவராம். 

இந்த நிலையில், நிஷிதா ஆன்லைனில் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும், முதல் பரிசாக 10 மில்லியன் திராம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல், துபாய் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. 10 மில்லியன் திராம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 17 கோடியே 68 லட்சமாகும். நிஷிதா இதுவரை 50 சீட்டுகளுக்கு மேல் வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close