Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவில், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்!

சிரியாவில், அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

U.S air strike in Syria

சிரியாவில், அரசுப்படை நடத்திய ரசாயனத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோதிலும், குழந்தைகள் உள்பட பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்... சிரியாவில், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின் விமானத் தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில், ரஷ்யப் படைகள் உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யப் படையினருக்கு பென்டகன் முன்பே தகவல் தெரிவித்து விட்டது. ரசாயனத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, அமெரிக்க அதிபர்  ட்ரம்ப், சிரியாவில் ராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 

சீனா அதிபர் ஜின் பிங்-ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close