Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா ரசாயனத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்!

சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலை, பல உலக நாடுகளும் கண்டித்துவரும் நிலையில், சீனாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சிரியா

 

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன வெடிகுண்டுத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன. 

தற்போது, சீனாவும் இந்தத் தாக்குதலுக்கு எதிராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா ரசாயன ஆயுதப் பயன்பாட்டினைக்  கடுமையாக எதிர்க்கிறது. குறிப்பாக, அப்பாவி பொதுமக்கள் வாழ்ந்துவரும் குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், சிரியாவில் நடந்த தாக்குதல்குறித்த தீவிர விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், இந்தத் தாக்குதலுக்குக் காரணமானோரை அடையாளப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close