Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரிய தாக்குதல் ஆரம்பம் தான்: அமெரிக்கா அதிரடி

சிரியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஆரம்பம் தான், இன்னும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார். 

nikki haley

சிரியாவில், கடந்த சில வாரம் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட பலர் பலியாகினர். அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இத்தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

இதையடுத்து, சிரியா மீது, அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்தியது. குறைவான சேதம் ஏற்படும் வகையில் சிரியா விமானப் படை தளத்தின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹலோ கூறுகையில்,' அமெரிக்காவின் தாக்குதல் ஆரம்பம் தான். தேவைப்பட்டால் இதற்கு பின்பும் அமெரிக்க நடவடிக்கை எடுக்கும். அதற்கான தேவைகள் வராமல் இருந்தால் நல்லது' என கூறியுள்ளார்.

மேலும் ரசாயனத் தாக்குதலுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பஷர் அல் ஆசாத்தின் செயல்களை, ரஷ்யா ஆதரிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close