Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா தாக்குதல்: அமெரிக்காவை விளாசிய பொலிவியா!

சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பொலிவியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான பொலிவிய தூதர், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ளார்.

lorent

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட பலர் பலியாகினர். அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இத்தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து சிரியா மீது, அமெரிக்கா  வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு வரவேற்புகளும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐ.நாவுக்கான பொலிவியா தூதர் லோரேன்டி கூறுகையில்,' 2003 ல் ஈராக்கில் பயங்கரவாத ஆயுதங்கள் இருப்பதாக கூறி போர் தொடுத்த அமெரிக்கா இதுவரை எந்த ஆயுதத்தையும் அங்கிருந்து எடுக்கவில்லை. இப்போது சிரியா மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலும் அமெரிக்காவின் முந்தைய செயலை போன்றதே' என அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச நாடுகளுக்கான சட்டத்தை மீறும் செயல் என அவர் கண்டித்துள்ளார். பொலிவியாவுடன் நல்ல உறவு கொண்டிருக்கும் ரஷ்யாவும் அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close