Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு வாய்ப்பு

ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக நியோமி ராவ் பணியாற்றி வருகிறார்.

niyomi rao

அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு அமெரிக்காவின் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தில் நிர்வாகி பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஒன்று.

இந்த அலுவலகம் மத்திய அமைப்புகளின் விதிமுறைகளை பரிசீலித்து, அவை அதிபரின் நோக்கத்துக்கு உகந்ததா அல்லது இல்லையா? என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். உகந்ததாக இல்லை எனும் பட்சத்தில் ஒழுங்குமுறை அமைப்பிற்கு அந்த விதிமுறையை நீக்கும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய முக்கியக்துவம் வாய்ந்த பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது அவருக்கு இணை ஆலோசகராக நியோமி ராவ் செயல்பட்டார். இவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திலும், சிகாக்கோ பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெற்றவர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close