Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனப்படுகொலை நாள் - பாகிஸ்தானைத் தாக்கும் ஷேக் ஹசினா

பாகிஸ்தான் செய்த அட்டூழியங்களைத் தாக்கும் வகையில் பங்ளாதேஷ் ‘இனப்படுகொலை நாள்’ அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா வந்துள்ள பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும், பங்ளாதேஷின் அத்தனை நல்முயற்சிகளிலும் இந்தியப் பிரதமர் மோடி உடனிருப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹசீனா

 

நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா பல ஒப்பந்தங்களில் இருநாட்டு உறவுக்கும் பயனளிக்கும் வகையில் கையெழுத்திட்டார். இன்று இந்திய அறக்கட்டளை விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில் ஹசீனா உரை நிகழ்த்தினார். உரையில் இந்தியா பங்ளாதேஷூக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பங்ளாதேஷில் மார்ச் 25-ம் நாளை ‘இனப்படுகொலை நாளாக’ அறிவிக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். தனது உரையில் பங்ளாதேஷூக்கு எதிராக பாகிஸ்தான் நிகழ்த்திய பல அட்டூழியங்களை செய்திருப்பதாகக் கூறினார்.

பங்ளாதேஷ் அறிவித்துள்ள ‘இனப்படுகொலை நாளுக்கு’ சர்வதேச சமூக அங்கீகாரம் கோருவதாக குறிப்பிட்ட அவர், பங்ளாதேஷின் அத்தனை நல் முயற்சிகளிலும் மோடி உடனிருப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close