Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிட்சர் பரிசுகளை குவித்த 'தில்' பத்திரிகையாளர்கள்..!

pulitzer

பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், இசைக் கலைஞர்களுக்கு பெருமை சேர்ப்பவை புலிட்சர் பரிசுகள். ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசை சார்ந்த துறைகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்படுகிறது புலிட்சர் பரிசு. 2017-ம் ஆண்டுக்கான பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது சேவை பிரிவுக்கான பரிசு, நியூயார்க் டெய்லி செய்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் செய்தி மற்றும் ரிப்போர்ட்டிங் பிரிவு: 36 பேர் பலியான 'கோஸ்ட் ஷிப்' பார்ட்டி அசம்பாவிதத்தை கவர் செய்து, அரசு மற்றும் நகரின் குறைகளை வெளிப்படுத்திய ஈஸ்ட் பே செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்கு வழங்கப்படுகிறது.

புலனாய்வு செய்தியாக்கம்: அதிகப்படியான பொதுமக்களை காவு வாங்கிய மேற்கு வெர்ஜினியா மழை வெள்ள பாதிப்பை அங்கு நடக்கும் அதிகார அச்சுறுத்தல்களை மீறியும், தனிப்பட்ட தாக்குதல்களை சமாளித்தும் தில்லுடன் செய்தியாக்கிய சார்லஸ்டன் கெஸட் மெய்ல் பத்திரிகையாளர் எரிக் அய்ர் என்பவருக்கு வழங்கப்படுகிறது.

சர்வதேச செய்தியாக்கம்: தி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளருக்கு வழங்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அயல்நாட்டு ஆதிக்கங்கள் குறித்து விளக்கமான கட்டுரை அளித்ததற்காக..!

விமர்சனம் பிரிவு: மேடை நாடகங்களின் உலகளாவிய கலாசார சூழல் சார்ந்தும், குறிப்பாக பாலினம், இனம் சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தமைக்காக பரிசு பெறுகிறார் தி நியுயார்க்கர் சார்பாக ஹில்டன் ஆல்ஸ் .

கார்ட்டூனிங் பிரிவு: மியாமி ஹெரால்ட் பத்திரிகையின் ஜிம் மோரின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலையங்கத்தின் சாராம்சத்தை துல்லிய தூரிகையில் தந்ததற்காக. 

இசை: 'ஏஞ்சல்ஸ் போன்'- இசைக்கோர்ப்புக்காக டூ யுன் பெறுகிறார்.


கவிதை: 'ஓலியோ'வுக்காக ட்யெஹிம்பா ஜெஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


நாடகம்: 'ஸ்வெட்' நாடகத்துக்காக லின் நாட்டேஜ் பெறுகிறார்.


சிறந்த புகைப்படம்: இ.ஜேஸன் வாம்ப்ஸ்கன்ஸ் (சிகாகோ ட்ரிப்யூன்) பெறுகிறார்.


மேலும், கற்பனை, வரலாறு, சுயசரிதை என 21 பிரிவுகளுக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close