Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு - ஆசிரியை, மாணவர் பலி!

அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் திடீரென்று புகுந்த ஒருவர், தன் மனைவியையும் சுட்டுக் கொன்று, தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூர சம்பவத்தில் எட்டு வயது பள்ளி மாணவனும் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு மாணவன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். 


கலிஃபோர்னியா மாகாணத்தின் சேன் பெர்னார்டினோ பகுதியில், நார்த் பார்க் ஆரம்பப் பள்ளி அமைந்துள்ளது. கரின் ஸ்மித் என்பவர், அந்தப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். அவருடைய கணவர் செட்ரிக் ஆண்டர்சன். இருவரும் கடந்த ஒரு மாத காலமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கரின் ஸ்மித் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஆண்டர்சன் அங்கு வந்தார்.

கரின் எதிர்பாராத நேரத்தில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கரினை சுட்டுக் கொன்றார். பின்னர், தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில், எட்டு வயது சிறுவர்கள் இருவர் காயமடைந்தனர். அதில், ஜோநாதன் மார்ட்னிஸ் என்ற சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அமெரிக்காவில் திடீர் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close