Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேஸ்புக் மூலம் பாலியல் துன்புறுத்தல்! அதிரடிகாட்டிய பெண் பத்திரிகையாளர்

பேஸ்புக்- மெசேஞ்சரில் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி வந்த ஆசாமியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட காரணமானார் பெண் பத்திரிகையாளர் ரானா அயூப்.

rana ayyub

 

இந்தியாவில் ‘அண்டர்கவர் ஜர்னலிஸம்’ என்னும் புலனாய்வு இதழியலின் முக்கிய இதழியலாளர் ரானா அயூப். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த பல ஊழல்களையும் தன்னுடைய ‘குஜராத் கோப்புகள்’ என்ற புத்தகம் மூலம் வெளிக்கொண்டு வந்தவர். இதழியல் துறையின் முக்கியப் பிரபலம் ஆவார். தற்போது இவரது பேஸ்புக் மெசஞ்ஜரில் ஆசாமி ஒருவர் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இப்பிரச்னையை சாதாரணமாக விடாமல் அந்த நபரின் பேஸ்புக் விவரங்களையும், அவர் அனுப்பிய தகாத மெசேஞ்களையும் படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ரானா அயூப்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பின்ஸி லால் என்னும் நபர் தான் ரானா அயூபை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். அயூபின் ட்விட்டர் பதிவினை பார்த்த பின்ஸி லால் பணிபுரியும் நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் பின்ஸி லாலின் விசா முடக்கப்பட்டு அவரை நாட்டைவிட்டே வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் ’நேஷனல் பெயிண்ட்ஸ்’ என்ற நிறுவனம் செய்துள்ளது.

மேலும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நபர் இம்மாதிரியான மோசமான செயல்களில் ஈடுபட்டதற்காக ரானா அயூபிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் தேவை எனவும் இதை பல நாடுகளும் பின்பற்ற வேண்டுமெனவும் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close