Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேட்டோ குறித்த கருத்து... பல்டி அடித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் தேர்தலின்போது... நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு 'காலாவதியாகிவிட்டது' எனத் தெரிவித்திருந்தார். இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg) உடன் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.

ட்ரம்ப்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், 'நேட்டோ காலாவதியானது என நான் அப்போது சொன்னேன். ஆனால், அந்த அமைப்பு இனி காலாவதியானது அல்ல. பாதுகாப்பு விசயத்தில் நேட்டோ போதிய அளவு செலவு செய்யவில்லை என நான் குற்றம் சாட்டியிருந்தேன். அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, தற்போது தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

'அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோ தொடர்ந்து செயல்படும்' என்ற உறுதிமொழிக்குப் பிறகுதான், ட்ரம்ப் இவ்வாறு பேசியிருப்பதாக, அமெரிக்கப் பத்திரிகைகள் விமர்சித்துவருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close