Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தின் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

US drops bomb on Afghanistan


ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நன்கர்ஹர் என்ற பகுதியில், அமெரிக்கா ராணுவம் அணுசக்தி அல்லாத பேரழிவு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் மீது குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 21,000 பவுண்ட் (9,525 கிலோ) அணுசக்தி அல்லாத குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் ஐ.எஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


எம்.சி .-130 ரக போர் விமானத்தில் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.


அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பிறகு பிற நாட்டின் மீது நடத்தப்படும், இரண்டாவது தாக்குதல் இது. ஏற்கெனவே கடந்த வாரம் சிரியா நாட்டின் மீது, அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சிரிய அரசு கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்காக, அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க ராணுவத்தை நினைத்து பெருமைப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close