Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வட கொரியாவா?

சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்கா. இந்த இரு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்கு முன்பே அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.


இதையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தும் பட்சத்தில், அதன் மீது தாக்குதல் நடத்த, அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கொரிய தீபகற்பத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்று, வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வரும் பகுதிக்கு 300 மைல் தொலைவில் உள்ளது. அமெரிக்காவின் கனரக குண்டுவீச்சு படைகளும் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், வட கொரியா மீது தாக்குதல் நடத்துவோம்" என்றனர்.  


இதற்கிடையே, ஆப்கன் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வட கொரியாவுடன் சீனா முறையாக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றால். அமெரிக்கா தனியாக நடவடிக்கை எடுக்கும்" என கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close